திருப்பூர்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுறுசுறுப்பாகியுள்ளது. மார்ச். 1ல் மாணவர் சேர்க்கை துவங்கிய நிலையில், ஐந்து நாளில், 1,083 குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் இணைந்துள்ளனர். மற்ற வகுப்புகளில் 711 பேர் என மொத்தம் 1,794 பேர் ஐந்து நாட்களில் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர். இதை பாராட்டி பள்ளி கல்வித்துறை இயக்குநர் நரேஷ், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழநிக்கு பாராட்டு கடிதம் அனுப்பினார்.