நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்
பாஜக 300 இடங்களில் வெற்றிப் பெறும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதுகுறித்து அவர் கூறியதாவது, “மக்களவை தேர்தல்
முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பாஜகவுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை” என்றார்.