ஜன.10க்குள் இலவச வேட்டி, சேலைகள் அனுப்ப உத்தரவு

55பார்த்தது
ஜன.10க்குள் இலவச வேட்டி, சேலைகள் அனுப்ப உத்தரவு
பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன. 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி