பழனி: தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டின் கீழ் ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளிகள் என 6 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மதியம் உணவு வழங்கும் திட்டத்தை இன்று (டிச. 26) சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 5,775 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.