மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அறியப்பட்ட ‘கேப்டன்’ விஜயகாந்த் மனதில் பட்டதை பேசக்கூடியவர். அவர் தனது மனைவி பிரேமலதாவுடன் ஒருமுறை முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவி செய்தார். அவர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசும்போது, “ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் தர்மம் செய்ய வேண்டும், எல்லா தெய்வமும் ஒன்றுதான். எனக்கு சாதி, மதம் கிடையாது. அதையெல்லாம் வெறுப்பவன் நான்” என்றார்.