இந்தியா, இலங்கை தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத நிலையில், முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங், 'உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 2 அணிகளுக்கு இடையிலான தொடரில் நான் ஒரு பந்தை கூட பார்க்கவில்லை. ஏனென்றால் என் கவனம் அனைத்தும் ஒலிம்பிக் போட்டிகள் மீது தான் இருந்தது' என கூறியுள்ளார். நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெறும் 6 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது.