நயன்தாராவின் திருமண வீடியோ அடங்கிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. அதில், "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக தயாரிப்பாளர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இந்த ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் வரும் சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக படத்தின் உரிமையாளர் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.