மொபைல் ஹாட்ஸ்பாட்டைப் பகிர மறுத்ததால் மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. மதீனா கிராமத்தைச் சேர்ந்த அஜய் குமார் தனது மொபைல் டேட்டா தீர்ந்து விட்டதால், ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்யுமாறு மனைவி ரேகாவிடம் கூறியுள்ளார். ரேகா தனது மொபைல் டேட்டா குறைவாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொன்றார். போலீசார் அவரை கைது செய்தனர்.