பொங்கல் கொண்டாட்டம்.. போதையில் அடித்து உருண்ட மாணவர்கள்

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இன்று (ஜன.11) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, சில மாணவர்கள் போதையில் வந்துள்ளனர். அவர்களை மற்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அது கைகலப்பாக மாறிய நிலையில், கையில் கிடைத்த கட்டைகள், குச்சிகள் கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி