ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள் ராக்கி கயிறு வைத்து தனது சகோதரனுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பின்னர் அவருக்கு இனிப்புகள் ஊட்டி அவருடைய கைகளில் ராக்கி கயிறு கட்ட வேண்டும். வசதிக்கு ஏற்றவாறு ராக்கி கயிறு சாதாரண கயிறு முதல் தங்கம், வெள்ளி, கற்கள் பதிக்கப்பட்ட கயிறாக இருக்கலாம். அதே போல் சகோதரர்களும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு தங்கைகளுக்கு பரிசுகளாகவோ, ரொக்க பணமாகவோ வழங்கலாம்.