முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில், தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் கொண்ட குழு இன்றே அமைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டுக்குழு, தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் எனவும் கூறப்படுகிறது.