நண்பன் பட பாணியில் மருத்துவமனையில் அனுமதி

72பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. நீரஜ் குப்தா என்பவரின் தாத்தாவுக்கு சனிக்கிழமை நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் நண்பரின் உதவியுடன் அவரது தாத்தாவை பைக்கில் உட்கார வைத்து சர்தார் வல்லபாய் படேல் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது பைக்கை நேரடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றதும் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து முதியவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இதுபோன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி