வயநாடு கெட்டுப்பாறை மற்றும் இருட்டுக்குத்தியில் இருந்து தலா ஒரு உடல் என 2 உடல்கள் நேற்று கண்டறியப்பட்டது. பின்னர் அவை மீட்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக கல்பெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி அருகில் மனித மண்டை ஓடு மற்றும் உடல் பாகம் மீட்கப்பட்டது. அவை நிலம்பூர் வழியாக கல்பெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.