திருவண்ணாமலை: 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட அகரம்பள்ளிப்பட்டு தொண்டமானூர் உயர்மட்ட பாலம் சேதமடைந்தது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "வரலாறு காணாத கனமழையால் பாலத்திற்கு மேல், 4 அடிக்கு உயரத்திற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றதன் காரணமாக பாலம் சேதம் அடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலத்தை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.