2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி

82பார்த்தது
2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி
2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை இன்று (மே 20) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது. வரும் 23ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்ட மக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில், 10 பேரிடர் மீட்பு குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி