5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்

56பார்த்தது
5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப நிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி