வயது வித்தியாசம் இன்றி தற்போது அனைவரின் வாழ்க்கையிலும் மாரடைப்பு ஒரு வில்லனாக மாறி வருகிறது. இதனை தடுக்க, நேந்திரன் வாழைப்பழம், வால்நட்ஸ், பசலைக்கீரை, வெண்ணெய் பழம், தயிர், பெர்ரி, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அபாயத்தை ஓரளவு குறைக்கலாம்.