உலர் திராட்சை ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்தது. புரதங்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் பி-6, மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன. அதே சமயம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. பருவகால நோய்கள், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இவற்றை அதிகமாக உட்கொள்வதால் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.