கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா, ஆந்திரா என்றவர்கள், இம்முறை பீகார், பீகார் என கூறுகின்றனர். ஆந்திரா, பீகாருக்கு நிதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை, தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?. அனைவரையும் ஏமாற்றும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்திருந்தால், தமிழகம் இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். மதவாத அரசியல் செய்யும் பாஜக, ஓட்டு அறுவடைக்காக மக்களை ஏமாற்றுகிறது என ஆவடி கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.