ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி, 2023-24ஆம் நிதியாண்டிற்கான கார்ப்பரேட் வருமான வரியாக ரூ.1.86 லட்சம் கோடி செலுத்தியுள்ளார். இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் நிறுவனமாக உருவாகியுள்ளதாக பெருமிதம் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டு இந்நிறுவனம் ரூ.1.77 லட்சம் கோடியை செலுத்திய நிலையில் தற்போது அதனை விட ரூ.9,000 கோடி அதிகமாக வரி செலுத்தியுள்ளது.