மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் தங்களின் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?. தண்டனை கொடூரமானதாக இருக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராது. இப்போது இல்லையென்றால் எப்போது? நடவடிக்கைக்கான நேரமிது” என குறிப்பிட்டுள்ளார்.