முருங்கைக் கீரையில் அதிக அளவு விட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. முருங்கைக்கீரை ஹேர்பேக் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேவையான அளவு முருங்கைக் கீரையை எடுத்து அதை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மயிர்கால்களில் படும்படி நன்றாக தேய்க்கவும். 30 நிமிடங்கள் ஊறவைத்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசவும். இவ்வாறு வாரம் இருமுறை என ஒரு மாதம் செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள்.