ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ரூ.53,160-க்கும், கிராமுக்கு 15 உயர்ந்து ரூ.6,645-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.95-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சில தினங்களாக ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறது.