திருமண மேடையில் மாப்பிள்ளையை காதலி துவைத்தெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றிக் கொள்ளும் சமயத்தில், மணமேடைக்கு வந்த மாப்பிள்ளையின் காதலி அவரை எட்டி உதைத்தார். நிலைத்தடுமாறி கீழே விழுந்த மாப்பிள்ளை எழுவதற்குள், காதலி அவரை அடி வெளுத்தெடுத்தார். அதன்பின் காதலி அவரை அழைத்துச் சென்றதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.