செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த புதுச்சேரி அரசுப் பேருந்தை இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடி முந்திச் செல்ல முயன்றது. அப்போது, அந்த இருசக்கர வாகனத்தின் பின்புறம் பேருந்து மோதியது. இதில், பின்னால் அமர்ந்து சென்ற காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலி உயிரிழந்த துக்கம் தாங்காமல், காதலனும் அதே இடத்தில் மற்றொரு பேருந்தின் முன் பாய்ந்து உடலை மாய்த்துக் கொண்டார்.