ஆணுறுப்பை அறுத்து இளைஞர் கொடூரக்கொலை

83228பார்த்தது
ஆணுறுப்பை அறுத்து இளைஞர் கொடூரக்கொலை
சேலம், சூரமங்கலம் புதுரோடு பகுதியில் உள்ள புனைகரடு பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது வீட்டிற்கு தம்பதி எனக்கூறி இருவர் வாடகைக்கு தாங்க வந்துள்ளனர். குடிவந்த மறுநாளில் இருந்து கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் ஐயம்பெருமாள் வீட்டு மொட்டை மாடியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதே நேரத்தில் அந்த தம்பதியினரும் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தது திருச்சி துறையூரைச் சேர்ந்த தியாகு என்பது தெரியவந்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி