பாஜகவில் இணைந்த காவலர்கள் சஸ்பெண்ட்

2228பார்த்தது
பாஜகவில் இணைந்த காவலர்கள் சஸ்பெண்ட்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த டிசமபர் 27ம் தேதி 'என் மண் என் மக்கள்' பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சீருடையில் இருந்த அவர்கள் மிஸ்டு கால் குடுத்து தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் தஞ்சாவூர் சரக டிஜிஐ ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி