சென்னையில் நடைபெறவிருக்கும் கேலோ விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய
பிரதமர் மோடிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கினார். பின்னர்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேலோ விளையாட்டு போட்டி தொடக்க விழாவுக்கு
பிரதமர் தமிழகம் வரவுள்ளதாகவும், தென் தமிழக வெள்ள பாதிப்பு நிவாரணம் குறித்தும் பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் ராகுல்காந்தியுடன்
அரசியல் குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.