மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவின்

237பார்த்தது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவின்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க பிக் பாஸ் பிரபலம் கவினிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் படத்திற்குச் செல்வதற்கு இடையே கவினை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் கவின் 'பியார் பிரேமா காதல்' படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' என்ற படத்தை முடித்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி