உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மனித முகம் உள்ள நிலையில், விநாயகருக்கு (பிள்ளையார்) மட்டும் யானையின் முகம் உள்ளது. இந்நிலையில், தேவலோகத்தில் கஜமுகாசுரன் என்ற
அசுரன், அங்குள்ளவர்களை மிகவும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை ஆண், பெண் சம்பந்தமில்லா பிறந்த ஒருவனாலேயே அழிக்க முடியும் என்ற வரத்தை பிரம்மாவிடம் பெற்றான். பார்வதிதேவி தன் திருமேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து ஒரு உருண்டையாக்கி உடல் உறுப்புக்களையும் வடிவமைத்தாள். பின் அந்த உடலுக்குக்கு உயிரையும் கொடுத்து, “பிள்ளையார்” என பெயர் சூட்டினாள். ஆண், பெண் கலப்பின்றி பிறந்த பிள்ளையார் கஜமுகாசுரனைப் போரிட்டு வென்று சர்வலோகத்தையும் பாதுகாத்தான்.