விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி

60பார்த்தது
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி மூதாட்டியும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் காப்பாற்றச் சென்ற மற்றொரு 15 வயது சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ரூ.30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ரூ.20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.