1970-2000-க்கு இடையில், ஆண்டுக்கு 90 முதல் 100 பேரழிவுகளை சந்தித்தோம். ஆனால் சுற்றுச்சூழல் மாற்றத்தால், 2015-ல் இந்த எண்ணிக்கை 400-ஐ எட்டியது. இதே நிலை நீடித்தால் 2030-ம் ஆண்டுக்குள் பேரழிவுகள் மேலும் தீவிரமடையும். மனிதன் திருந்தாவிட்டால் ஆண்டுக்கு 560 பேரிடர்களை சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் மட்டுமின்றி, பெருந்தொற்றுக்கள், இரசாயன விபத்துக்களும் இதில் அடங்கும்.