சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பணிமனைக்கு சென்ற சரக்கு ரயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனி வழித்தடத்தில் தடம் புரண்டுள்ளதால், வழக்கமான பயணிகள் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், ரயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.