51 பேரை காவு வாங்கிய காட்டுத்தீ

69பார்த்தது
51 பேரை காவு வாங்கிய காட்டுத்தீ
தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. மத்திய சிலி நகரமான வால்பரைசோ மற்றும் கடற்கரை சுற்றுலா நகரமான வீனியா டெல் மாருக்கும் தீ பரவியதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. தீயில் சிக்கி குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 43,000 ஹெக்டேருக்கு மேல் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலி உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி