சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 2022ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலாஜி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் பாலாஜி கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த அவர், மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் புகார் அளித்த நிலையில் தலைமறைவாக இருந்த பாலாஜியை 2வது முறையாக கைது செய்தனர்.