திமுகவை விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான போது கண்டுகொள்ளாமல், இந்தியக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றார். தற்போது பிரதமர் மோடி மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார். இந்த டிராமா மாடல் அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.