இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த உலக புகழ்பெற்ற மருத்துவரான பத்மஸ்ரீ, கே. எம். செரியன் பெங்களூருவில் நேற்று (ஜன. 25) காலமானார். அவருக்கு வயது 82. மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்து காட்டிய மருத்துவர் கே. எம். செரியன். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.