வட கொரிய அதிபரை மீண்டும் சந்திக்க டொனால்டு டிரம்ப் திட்டம்

69பார்த்தது
வட கொரிய அதிபரை மீண்டும் சந்திக்க டொனால்டு டிரம்ப் திட்டம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. நீர்மூழ்கி கப்பலிலிருந்து செலுத்தக்கூடிய அந்த ஏவுகணை, ஆயிரத்து 500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை 2 மணி நேரம் 5 நிமிடங்களில் சென்று தாக்கியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. தென் கொரிய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவிவருவதாகவும் வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி