நாட்டில் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே பணி செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படிப்படியாக அது அமல்படுத்தப்படும் எனவும் தெரிகிறது. வாரத்திற்கு 5 நாள்களுக்கு பதிலாக 4 நான்கள் மட்டும் பணி செய்ய விரும்புவோர் வழக்கத்தை விட குறைவான சம்பளத்தை பெறுவார்கள். ஆகையால், இதற்கான திட்டம் வகுக்கப்படும் என கூறப்படுகிறது.