உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஞ்சுதேவி (27) என்ற பெண் காதல் திருமணம் செய்த நிலையில் தனது 9 மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சு தேவியின் மூத்த சகோதரி மனிஷாவும் கடந்த இரண்டு மாதங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஜன.25) நடந்த தகராறின்போது அஞ்சுதேவி தனது 9 மாத குழந்தையை வீட்டின் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். குழந்தை உயிரிழந்த நிலையில் அஞ்சுதேவியை போலீசார் கைது செய்துள்ளனர்.