FIFA கால்பந்து உலகக்கோப்பை வரும் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கிறது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளிலிருந்து மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதிவரை சுமார் ஒரு மாத காலத்திற்கு அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.