ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கொத்தச்செருவில் இருந்து இந்துப்பூருக்குச் சென்ற பேருந்தில் மது போதையில் ஒருவர் விநோதமாக பயணித்துள்ளார். பேருந்தின் டயருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டெப்னி டயர் மீது தூங்கியபடியே வெகுதூரமாக பயணம் செய்துள்ளார். பின்னால் வந்த வாகன ஒட்டிகள், பேருந்தின் அடியில் ஒருவர் தொங்கியபடி வருவதாக ஓட்டுநரிடம் தெரிவித்தனர். உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், பின்பக்க டயரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.