கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் வெளியேற்றப்படுபவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43 வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக இருந்தது.