நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் அதிகாரி (Video)

82பார்த்தது
நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. தன்னை அதிகாரி தாக்கியதாக கங்கனாவே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். டெல்லிக்கு அவர் செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சை கருத்தை அவர் முன்னர் தெரிவித்த நிலையில் அதற்காக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் கங்கனா வெற்றி பெற்றிருந்தார்.

தொடர்புடைய செய்தி