டெல்லி நேரு பிளேஸ் பகுதியில் 34 வயது ஆணின் சடலம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருப்பதாக இன்று (ஜூன் 6) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் லஜ்பத் நகர் பகுதியில் உள்ள தயானந்த் காலனியைச் சேர்ந்த துருவ் மகாஜன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் காரில் தீக்குளித்ததும் தெரியவந்தது. இதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து இறந்ததாக தெரியவந்துள்ளது.