சாலையில் பல முறை பல்டி அடித்த கார்... வீடியோ...

63பார்த்தது
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் சிக்னலில் நிற்காமல் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதியதில் நடுரோட்டில் கார் பல உருண்டோடி விபத்துக்குள்ளான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மிகவும் பரபரப்பான கன்டோன்மென்ட் க்ளப் பகுதியில் அதிவேகமாக வந்த கார் சிக்னலில் நிற்காமல் சாலையை கடக்க முயற்சித்த போது மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதன்பிறகு, கட்டுப்பாட்டை கார் டிவைடரில் மோதி சாலையில் மூன்று முறை உருண்டோடி கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி