சுருண்டு விழுந்த நபர்.. உயிரை காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் அதிகாரி

73பார்த்தது
டெல்லி நங்லோய் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கடந்த 2ஆம் தேதி வந்த அனில் குமார் என்ற 58 வயது நபர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். இதனை கவனித்த அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி உத்தம்குமார் உடனடியாக அந்நபருக்கு சிபிஆர் செய்து உயிரைக் காப்பாற்றினார். பின்னர், அனில் குமார் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி