ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற ரவுடி ஜான் (எ) சாணக்கியன் - ஆதிரா தம்பதியை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே ரவுடி ஜான் உயிரிழந்த நிலையில், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.