“இந்த தேர்வுமுறை நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. முடிந்தளவு தேர்வர்களுக்கு சொந்த மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தாண்டி உள்ளவர்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. இது ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான்" என ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.