ஈரோடு: காவலர் மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சவுண்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர் 2008 பேட்ச் காவலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் கார்த்திக் மீண்டும் தற்காலியை பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள திருமணமான பெண் ராணி(27) என்பவருடன் ஆறு மாதம் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது இந்நிலையில் 6ந்தேதி காலை 8 மணி அளவில் ராணி வீட்டிற்கு சென்று குடிபோதையில் வாய் தகராறு செய்துள்ளார். ராணி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய வந்திருந்த போது காவலர் கார்த்திக் அந்தியூர் காவல் நிலையம் வந்து காவலர்களிடம் தகராறு செய்து உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் என்பவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி திட்டி உள்ளார் மேலும் தலைமை காவலர் ராமச்சந்திரனின் சட்டையை பிடித்து இழுத்து உள்ளார் இது சம்பந்தமாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர் கார்த்தி மீது, குற்ற எண் 555/2024 கீழ் அண்டர் செக்சன் 332c, 296b, 74, 78(2), 79, 132, 351(3), 451, 294(b), 354, 354d, 509, 353, 506(11) ipc உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.